பேரவை முரசு விவாத மேடை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
Top posting users this week
No user

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

Most users ever online was 13 on 14/09/23, 03:12 pm
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar

Log in

I forgot my password


அரசியல் தலையீடு ஆபத்தானது...

Go down

அரசியல் தலையீடு ஆபத்தானது... Empty அரசியல் தலையீடு ஆபத்தானது...

Post by Kayveeyes 02/09/18, 09:38 pm

அன்புத் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் வணக்கம்.

நமது தென் சென்னை குழுவில் எப்போதும் நமது அமைப்புக்குள் பிரச்னைக்குரிய விஷயங்களை பதிவதில்லை.

IPPB என்ற Ltd
கம்பெனி நமது இலாக்காவில்
நுழைந்து நம்மை அடிமையாக்கத் துவங்கிவிட்டது. அடுத்தது இன்சூரன்ஸ் கம்பெனி வர உள்ளதாக நமது இலாக்கா மந்திரி ஏற்கனவே 7.7.18 அன்று பத்திரிக்கையில் வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டார்.

நியாயமாகப் பார்த்தால் இதையெல்லாம் எதிர்த்து இந்நேரம் காலவரையற்ற வேலைநிறுத்தம் நாம் நடத்திகொண்டு இருக்க வேண்டும். இது எதையும் கண்டு கொள்ளாமல் தற்போதைய சம்மேளத் தலைமை உள்ளதே என்று ஊழியர் கொதித்துப் போய் கையறு நிலையில் புலம்பி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவை எதையும் நம் குழுவில் நாம் பதியவில்லை.

மாறாக தோழர். ரவி அவர்கள் தோழர். கண்ணனின் பதிவாக இங்கே சில பிரச்னைக்குரிய விஷயங்களைப் பதிந்ததால்,உண்மை நிலையை விளக்க கீழே சிலவற்றை நமது தோழர்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாய சூழல் நமக்கு ஏற்பட்டுள்ளது. பார்க்கவும்.

இந்தத் துறையில் IPPB புகும்போது, கார்ப்பரேட் மயமாகும்போது நமது சம்மேளனம் அதை எதிர்த்து இதுவரை எத்தனை போராட்டம் நடத்தியது ?
என்ன எதிர்ப்பை பதிவு செய்தது ? உங்களுக்குத் தெரியும்தானே.

கடந்த மூன்று ஆண்டுகளில் நம்மைத் தவிர இது குறித்து எவரும் எதுவும் பேசினார்களா ? நமது மாநில அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை எச்சரிக்கைப் பதிவுகள் போடப்பட்டன. இன்னமும் அதில் இருக்கின்றன.
சென்று பார்க்கவும். உண்மை புரியும்.

உங்களுக்குத் தெரியும். கடந்த வாரம் நமது சம்மேளனம் நமது துறையின் செயலருக்கு ஒரு கடிதம் எழுதியது.
அந்தக் கடிதத்தில், கேரள வெள்ளத்தினால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,
அதனால் கேரளாவில் மட்டும் IPPB துவக்க விழாவை ஒருவாரம் ஒத்திவைத்து பிறிதொரு நாளில் அந்த விழாவை நடத்தி IPPBஐ துவக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் அர்த்தம் என்ன ? IPPB ஐ ஏற்றுக் கொண்டதாகத்தானே ? இதுதான் இன்றைய சம்மேளனத் தலைமையின் உண்மையான நிலைப்பாடு. மீண்டும் அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தால் உங்களுக்குத் தெளிவாகப் புரியும். படியுங்கள்.

இதுபோல கடந்த 7.3.18ல் IPPB குறித்து தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசிட இலாக்கா அழைத்த போது, IPPB என்ற Ltd கம்பெனியை அஞ்சல் துறைக்குள் ஏற்க முடியாது என்று எதிர்த்து குரலெழுப்பி கடிதம் கொடுப்பதற்கு பதிலாக நமது சம்மேளன பொதுச் செயலர் உள்ளிட்ட தலைவர்கள், GDS க்கு IPPB வேலைக்கான Incentive வேண்டாம்.. அதற்கு பதில் வேலை அளவீடுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கடிதம் கொடுத்து வந்த செய்தி உங்களுக்குத் தெரியுமா ?

கீழே இவர்களாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்த அந்தக் கடிதத்தின் நகலை பிரசுரிக்கிறோம். பாருங்கள். இதற்கு என்ன அர்த்தம் ? IPPB ஐ முழுமையாக ஏற்றுக் கொண்டு டிபன் காப்பி சாப்பிட்டு விட்டு நம்மைக் கை கழுவி விட்டார்கள் என்றுதானே அர்த்தம்.

நம்மிடம் ஏற்கனவே40% க்கு மேல் ஆட்பற்றாக்குறை. ஆனால் IPPB க்கு இங்கிருந்து deputation அனுப்ப உடன்பட்டு கடிதம் கொடுத்தது மறக்குமா என்ன ?

இதையெல்லாம் உங்களிடம் இதுவரை சொல்லாமல் மறைத்ததே தவறுதான். புண்ணை மறைக்க புனுகு தடவியதால் இன்று புரையோடிப் போய் நாம் நிர்க்கதியாக IPPB க்கு ஆள் சேர்க்க தெருத் தெருவாய் நிற்கிறோம்.

BSNL ஐ விட நம் நிலை மோசமாகப் போகிறது. எல்லாம் கார்ப்பரேட் கம்பெனியாக ஒத்துக் கொண்டு விட்டால், அப்புறம் பழைய பென்சன் கொடு என்று எப்படி போராடுவது ? கம்பெனி சட்டத்தில் அப்படி கொடுப்பார்களா ?

இதைப் பார்த்து நம் தோழர்கள் ஒருவர்கூட - நாகரிகமாக கூட எந்த விமரிசனத்தையும், எந்த இடத்திலும்... பதிவு செய்யவில்லை.
ஆனால் அகில இந்திய அளவிலான எல்லாப் பிரச்னைகளுக்குமே தமிழக அஞ்சல் மூன்று சங்கம்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மட்டும் மறக்காமல் பதிவு செய்கின்றனர். புரிதல் குறைவா என்று தெரியவில்லை.

இந்த நேரத்தில் உங்களுக்கு வேறு ஒன்றை தெரிவிக்கிறோம். நன்கு கவனித்தால் புரிய வரும்.

ஒரு குறிப்பிட்ட அணியினரின் அரசியல் கட்சி மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளுடன், அவர்கள் நாடுதழுவிய அளவில் போராட்டம் அறிவிக்கும் அதே நாளில்......

நமது ஊதியக்குழு கோரிக்கைகள், புதிய பென்சன் திட்ட எதிர்ப்பு கோரிக்கைகள், தனியார் மய, கார்ப்பரேட் மய எதிர்ப்பு கோரிக்கைகள் என கோரிக்கைகள் வைத்து நமது வேலை நிறுத்தத்தை அதே நாளில் அறிவித்து, அல்லது அவர்கள் அறிவிக்கும் அதே நாளுக்கு கொண்டு சென்று ....

அதனை அரசியல் கட்சி வேலை நிறுத்தமாக மாற்றும் உத்தியை மட்டும் தவறுதலின்றி அன்றிலிருந்து இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றனர். அந்த மனநிலையில் இன்று கூட மாற்றமில்லை.

ஆனால் இங்கே நமது துறையில் கார்ப்பரேட் மயம் வரும்போது, நமது இலாக்காவே மூழ்கும்போது வாய்மூடி மௌனமாக உள்ளனர்.
தப்பித் தவறி வருத்தப்பட்டு கேட்டால் தவறை சரி செய்து கொள்ள முயலாமல் வக்காலத்து வாங்குவதும் சேற்றை மற்றவர் மீது எறிவதும் என்ன சாமர்த்தியமோ தெரியவில்லை.

கேட்டால் NFPE க்கு இவர்கள்தான் சொந்தம்போலவும் மற்றவரெல்லாம் எதிரி போலவும் மோடி பாணியில் பிரச்சாரம் செய்கின்றனர்.

NFPE ஐ என்றைக்கும் நாம் விட்டுக் கொடுத்தது கிடையாது. சொல்லப் போனால் தோழர் கிருஷ்ணன்- KVS இணைந்த காலத்தை பொற்காலமாக பிரச்சாரம் செய்ததே நாம்தான். அவர்கள் காலத்தில் வேலை செய்தார்கள். பாராட்டினோம்.

ஆனால் தற்போது வீடே பற்றி எரியும் போது, நமது துறையே கார்ப்பரேட் மயமாகும் போது அதனை எதிர்த்து ஒரு சிறு முணுமுணுப்பு கூட செய்திடாமல், வீடு பற்றி எரிந்தால் பரவாயில்லை ; ஆடு கட்ட இடம் கொடு என்பது போல Payment A/c ஆவது POSB ல் இருக்கட்டும் என கடிதம் எழுதினால் என்ன செய்வது? ஆதங்கப்பட்டு கேட்கக் கூட கூடாதா ?

கேட்டால் NFPE க்கு நம்மை எதிரி என்பதா ? வாயே திறக்கக்கூடாதா ? என்ன மனிதர்கள் இவர்கள் ?

ஆக அவர்களுக்கு, நமது பிரச்னைகளுக்கான போராட்டம் நடத்தி தீர்வைத் தருவதைவிட, நமது இலாக்கா மூழ்கும்போது போராட்டம்-வேலை நிறுத்தம் நடத்தி எதிர்ப்பதைவிட, நமது GDS ஊழியர்கள் நடுத்தெருவில் நிற்கும்போது வேலை நிறுத்த அறிவிப்பு
செய்து ஊழியர்களைக் காப்பதைவிட ....

இந்த அரசின் மீதான ஊழியர்களின் வெறுப்பை, கோபத்தை அரசியலாக்கி ...

அதை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு எதிர்ப்பான போராட்டமாகவும், தங்கள் அரசியல் கட்சிக்கு ஆதரவான மனநிலையாகவும் கொண்டு செல்வதிலேயே குறியாக உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அப்படி நடைபெறும் போராட்டத்தை 18 கோடி உழைக்கும் வர்க்கத்தினர் கலந்துகொண்ட மத்திய அரசுக்கெதிரான இடது சாரிகளின் போராட்டம் இது...

இடது சாரிகளின் மாபெரும் வெற்றி இது என அறிவித்துக் கொண்டு....

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதனை, இதே கார்ப்பரேட் வங்கியை அறிவித்த காங்கிரசுடன் கூட்டணி பேரம் நடத்தும் கருவியாக உபயோகப் படுத்தவே முயல்கின்றனர் என்பதும் தெளிவு.....

நமக்கு மோடியும் ஒன்றுதான்...
ராகுலும் ஒன்றுதான் .. நரசிம்மராவும் ஒன்றுதான்... வாஜ்பாயும் ஒன்றுதான்...
ஊழியர் நலனுக்கு எதிரான ஆட்சியாளர் எவரானாலும் நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். கட்சியெல்லாம் சங்கத்திற்கு வெளியேதான் என்பதே நமது கொள்கை.

நமக்கு உதவிய வைகோவையும் பாராட்டுவோம்... ஸ்டாலினையும் பாராட்டுவோம்...
இந்திரஜித் குப்தாவையும் பாராட்டுவோம்... ஆனால் சிலருக்கு ஒற்றைக் கண் பார்வை மட்டுமே.. . அந்த வழியில் நாம் போகவேண்டும். இல்லையென்றால் எதிரிதான்.

இந்த அரசியலைத்தான் அன்றைய தலைவர்கள் முதல் நேற்றைய தலைவர்கள் NCA, பாலு அவர்கள் காலம் மற்றும் இன்று வரை கடுமையாக நாம் எதிர்த்து வருகிறோம்.

ஆனாலும், தொழிலாளர்களுக்கு எதிரான வலுவான தாக்குதல்கள் வரக்கூடிய காலத்தில், தொழிலாளர் சக்தி பிரிந்து போகக்கூடாது என்பதாலேயே நாம் அவர்களுக்கு எந்த இயக்கங்கள் நடத்துவதிலும் முழு ஒத்துழைப்பை நல்கி வருகிறோம்.

எந்த அரசு மத்தியில் இருந்தபோதும், பிரச்னைகளின் அடிப்படையில் நாம் போராட்டங்கள் இயக்கங்கள் நடத்தி வருகிறோம். பொதுப் போராட்டங்கள் அனைத்திலும்கூட இன்றுவரை கலந்துகொண்டு வருகிறோம்.

இந்த ஒத்துழைப்பு ... இந்த ஒற்றுமை ...
நல்ல நோக்கம் கருதியே...
நம் வீடே பற்றி எரியும்போது Embarassed Embarassed Embarassed Embarassed அமைதி காத்து... பிரிதொருநாளில் அரசியல் கட்சிகளின் போராட்ட நாளில் நம் போராட்ட தேதியை கொண்டு சேர்க்க அல்ல ...

கேட்டால் வேலை நிறுத்தத்தின் சதவீத கணக்கு சொல்கிறார்கள். தொழிலாளர் ஆதரவில்லையாம். அதனால் வேலை நிறுத்தமோ போராட்டமோ அறிவிக்க இயலாதாம். அரசியல் கட்சி வேலை நிறுத்தத்திற்கு மட்டும் ஆதரவு இருக்கிறதா என்ன? எல்லோரையும் கேட்டுதான் அந்த வேலை நிறுத்தங்கள் அறிவிக்கப் படுகின்றதா என்ன? அப்புறம் அதை மட்டும் குறியாக எப்படி அறிவிக்கிறார்கள் ? அதில் சதவீத கணக்கு என்ன ? நாம் கேட்கக் கூடாதா ? கேட்டால் NFPE ன் எதிரியா ? இது என்ன எதேச்சாதிகாரம் ?

இதனை நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கே இந்தப் பதிவு.... நன்றி.

தோழமையுடன்,

N. இராஜேந்திரன்,
கோட்டச் செயலர்,
அஞ்சல் மூன்று,
தென் சென்னை.
Kayveeyes
Kayveeyes
Admin

Posts : 5
Join date : 01/09/2018
Age : 72
Location : Chennai

https://peravaimurasu.forumotion.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum