பேரவை முரசு விவாத மேடை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
Top posting users this week
No user

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

Most users ever online was 13 on 14/09/23, 03:12 pm
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar

Log in

I forgot my password


DG Post உடன் ஊழியர் தரப்பு பிரச்னைகள் குறித்த சந்திப்பு !

Go down

DG Post உடன் ஊழியர் தரப்பு பிரச்னைகள் குறித்த சந்திப்பு ! Empty DG Post உடன் ஊழியர் தரப்பு பிரச்னைகள் குறித்த சந்திப்பு !

Post by J. Ramamurthy 08/09/18, 01:18 pm

சிறப்பு சுற்றறிக்கை எண் : 16
நாள் : 07.09.2018.
====================

"""""""""""""""""""'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""""""""""""""""""""""""""""""""""""""
DG Post உடன் ஊழியர் தரப்பு பிரச்னைகள் குறித்த சந்திப்பு !
"""""""""""''''''""""""""""""""""'"''""'"'''''""”""""""""""""""""""""""""""""""""""""""""
ஏற்கனவே நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயற் குழுவில் எடுத்த முடிவின்படி, புது டெல்லி மாபெரும் தொழிலாளர் பேரணிக்குப் பின்னர் 6.9.18 அன்று நமது சம்மேளன மாபொதுச் செயலர் தோழர். R.N பராசர் அவர்களுடன் நம்முடைய தமிழக அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர்.J.R., மாநிலத் தலைவர் தோழர். M.செல்வ கிருஷ்ணன், மாநில நிதிச் செயலர் தோழர் A. வீரமணி ஆகியோர் புதுடெல்லி அஞ்சல் இயக்குனரகம் சென்று முறையே திருமதி. மீரா ஹண்டா, DG Posts, திரு.T.Q. முகம்மது, Secretary, Postal Services Board & DDG, PBI, திரு. Shailendra Dashora, DDG (SR, Legal & VP) ஆகியோரைச் சந்தித்து இலாக்காவின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும், தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பல்வேறு ஊழியர்கள் பிரச்னைகள் குறித்தும் நேரிடையாக கடிதம் அளித்து விவாதித்தோம்.

நமது துறையின் செயலர் வெளிநாடு சென்றிருப்பதால் அவரை சந்திக்க இயலவில்லை.

இந்த சந்திப்பு தேதியில் நமது சம்மேளனத்தின் சார்பிலும், நம்முடைய அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பிலும் அளிக்கப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை 29 ஆகும்.

அவை தனியே சம்மேளன மற்றும் அகில இந்திய சங்க வலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும்.

அளிக்கப்பட்டகடிதங்கள் அனைத்தின் மீதும் உடனடி நடவடிக்கை கோரியிருக்கிறோம். அவை அனைத்தின் மீதும் பேசிட வாய்ப்பு இல்லை எனினும், ஒவ்வொரு அதிகாரியுடனும் சில குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்து நேரில் விவாதித்து தீர்வு கோரினோம். அதன் விபரங்கள் கீழே.

DG Post உடன் பேசப்பட்ட பிரச்னைகள்:
--------------------------------------------------------------------
1. SAP/ DPMS நீண்ட காலமாக செயல்பாடின்மை குறித்தும் தற்போது கடந்த நான்கு நாட்களில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது குறித்தும் இதன் காரணமாக பொது மக்கள்
சேவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும், ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளது குறித்தும் தெரிவித்தோம்.
அதற்கு DG அவர்கள், இலாக்காவில் இதன்மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், நிதி ஒதுக்கீடு குறித்து துறை அமைச்சகம் விரைவில் முடிவெடுக்க உள்ளதாகவும், இடைக்கால பிரச்சினைகள் குறித்து நேரடிப் பார்வையிட்டு உடனடி நடவடிக்கைகள் எடுத்து சரி செய்திட DDG TECH அவர்களை சென்னை அனுப்பி யுள்ளதாகவும் தெரிவித்தார்.

2. ஆட்பற்றாக்குறை பிரச்சினைக்கு,
ஆயிரக் கணக்கில் காலியிடங்கள் இருந்தும் அவை FEEDER CADRE ஆகிய எழுத்தர் பகுதியில் இல்லாமல் SUPERVISORY பகுதிகளில் அதிகம் இருப்பதாலும், அந்த உயர் நிலை பதவிகளை உரிய தகுதியான சேவைக்காலம் உள்ள நபர்கள் இல்லாத காரணத்தால் நிரப்பிட இயலவில்லை என்பதால், எழுத்தர் பகுதியில் ஆளெடுப்பு என்பது அறிவிக்கப் பட்டாலும் கூட அதிக அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்திட வில்லை என்பதை சுட்டிக் காட்டி கடிதம் அளித்து பேசினோம். இதனடிப்படையில் உடனடியாக HSG I, HSG II பதவிகளை நிரப்பிடுவதற்கு அடிப்படை சட்டத்தை ஒரு முறை தளர்த்தி அனைத்து உயர்நிலைப் பதவிகளையும் NOTIONAL ஆக உடனடியாக நிரப்பிட, உரிய பரிந்துரைகளை DOPT அமைச்சகத்திற்கு உடனே அனுப்பிட வேண்டும் என்று கோரினோம்.இதனை ஏற்றுக் கொண்ட DG அவர்கள் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

3.மேலும் அனைத்து மாநிலங்களிலும் கேடர் சீரமைப்பு உத்திரவை மேலும் தாமதமின்றி அமல் படுத்த வேண்டும் என்றும் , அப்படி அமல் படுத்தப்பட்டால், மீதமுள்ள LSG பணியிடங்களில் எழுத்தார்கள் பதவி உயர்வு பெற்று அமர்வார்கள் என்றும் இதன் காரணமாக எழுத்தர் காலியிடங்கள் மேலும் ஏற்பட்டு புதிய ஆளெடுப்பு சாத்தியம் ஆகும் என்றும், விதி 38 இடமாறுதல்களும் தாமதமின்றி கிடைக்கும் என்றும் வலியுறுத்தினோம். இதனையும் ஏற்றுக் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார்.

4.மூன்றாவதாக, ஆட்பற்றாக்குறை பிரச்சினை தீரும்வரை , எழுத்தர் காலியிடங்களில் , விருப்பமும் தகுதியும் உள்ள தபால்காரர், MTS, GDS ஊழியர்களை பணி செய்திட உரிய உத்திரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இதன் மீது DG அவர்கள் உடன் ஒப்புதல் தரவில்லை எனினும் இது குறித்து DDG ESTT உள்ளிட்ட கீழ் நிலை அதிகாரிகளிடம் நமது கடிதம் குறித்து விவாதித்து உரிய முடிவை எடுப்பதாக தெரிவித்தார்.

5. POSTMASTER GRADE ஊழியர்களுக்கு அதன் துவக்கத்தின்போதே, ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு இந்த CADRE இன் தேவை அல்லது மேம்படுத்துதல் குறித்து பரிசீலிப்பதாக இலாக்கா உறுதி அளித்திருந்த போதும் ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த CADRE குறித்த எந்த வித முடிவோ , அல்லது கேடர் சீரமைப்போ , சீனியர் POSTMASTER பதவிகள் IDENTIFY செய்திடவோ இதுவரை நடக்கவில்லை என்று கோரி கடிதம் அளித்தோம். அதற்கு DG அவர்கள், உறுதி அளித்தபடி இந்த ஆண்டில் அதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், இவை விரைவு படுத்தப்படும் என்றும் விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். நம்மை பொறுத்தவரை GENERAL LINE, PM GRADE
இரண்டையும் ஒன்றாக்க வேண்டும் என்றும், இருக்கின்ற GRADE I POSTMASTER பதவிகளை HSG II நிலைக்கு உயர்த்தவும், GRADE II பதவிகளை HSG I நிலைக்கு உயர்த்தவும் , GRADE III பதவிகளை NFG நிலைக்கு உயர்த்தவும் அந்த POSTMASTER களை அவ்வாறே அந்தந்த பதவிகளில் பணியமர்த்திடவும் கோரியுள்ளோம். இவை கேடர் சீரமைப்பில் நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

6. தமிழகத்தில் எழுத்தர் பகுதியில் நாமக்கல், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற கோட்டங்களில் காலிப் பணியிடங்கள் ASSESSMENT செய்வதில் கடந்த 2005 முதல் 2008 வரையான காலங்களில் குளறுபடிகள்
நடந்துள்ளதாகவும் இது போல பல கோட்டங்களில் உள்ளதாகவும் இந்த கோட்டங்களில் எல்லாம் SANCTIONED STRENGTH மற்றும் WORKING STRENGTH க்கு இடையே நீண்ட இடைவெளி இருப்பதாகவும் இவற்றை சரிபார்ப்பு செய்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் ஆளெடுப்பு உடனே
நடத்திட வேண்டும் என்றும் ஏற்கனவே கோரியதை 0000)0)JCM இலாக்கா குழு கூட்டத்தில் ஏற்றுக் கொண்டும், RJCM கூட்டத்தில் ஒப்புக் கொண்டும் இன்று வரை இதன் மீது எந்தவித நடவடிக்கையும் தமிழக அஞ்சல் நிர்வாகத்தால் எடுக்கப் படவில்லை என்றும்தெரிவித்து கடிதம் அளித்தோம். இதன் மீது உடன் நடவடிக்கை எடுப்பதாக DG அவர்கள் உறுதி அளித்தார்.

7. DEMONISATION காலத்தில் பணியாற்றிய விடுமுறை மற்றும் பணி நீட்டிப்பு காலங்களுக்கு இதுவரை எந்த வொரு மாநிலத்திலும் ஈட்டு ஊதியம் வழங்கப் படவில்லை என்றும் இதன் மீது இலாக்கா உடனடி முடிவை எடுத்து விடுமுறை நாள் பணிக்கு ஒரு நாள் ஊதியக் கணக்கிலும், நீட்டிக்கப்பட்ட பணி காலத்திற்கு ஒரு நாள் ஊதியத்தின் மணி நேரக் கணக்கிலும் வழங்கிட உத்திரவு இட வேண்டினோம். இதன் மீதும் உடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அடுத்து திரு.T.Q. முகம்மது, Secretary, Postal Services Board & DDG, PBI, அவர்களை சந்தித்தோம். அவரே இலாக்காவில் IPPB பகுதிக்கான நேரடி பொறுப்பு வகிக்கும் அதிகாரி . அவருடன் IPPB குறித்த நமது எதிர்ப்பினை தெளிவாக பதிவு செய்தோம். இதன் மீது நீண்ட விவாதம் நடைபெற்றது. இது அரசின் கொள்கை முடிவு என்றும் IPPBன் முதலீடுகள் நூறு சதமும் அரசின் கையில் தான் உள்ளது என்றும் அன்னிய மற்றும் தனியார் முதலீடுகள் செய்வதில் அரசு உடனடியான முடிவுகள் எதுவும் எடுக்காது என்றும் அதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றும், அப்படி எதுவும் செய்வது குறித்து காபினெட் தான் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது இது ஒரு AGENCY பணியாகத்தான் அஞ்சல் ஊழியர்கள் செய்திடுவார்கள் என்றும் அதற்கான ஊக்கத் தொகை அதிக அளவில் வழங்கிட உரிய கோப்புகள் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் விரைவில் அவை அதிகார பூர்வமாக அறிவிக்கப் படும் என்றும் தெரிவித்தார். மேலும் இன்சூரன்ஸ் கம்பெனி துவக்குவது குறித்து அறிவிப்பு நிலையில் தான் உள்ளதே தவிர உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப-்படவில்லை என்றும் தெரிவித்தார். நம்மைப் பொறுத்தவரை ஏற்கனவே POSB , MONEY ORDER போன்றவை நிதி அமைச்சகத்தின் சேவைகள் ஆன போதிலும் அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக இயங்குவது போல IPPB யும் இயங்கிட வேண்டும் என்றும் , IPPB தனி கம்பெனி ஆக இருக்கும் பட்சத்தில் அதற்கென தனியே பணியாளர்களை நியமித்துக் கொள்ள வேண்டும் என்றும் , அஞ்சல் பகுதியிலிருந்து DEPUTATION செல்வதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் பதிவு செய்தோம். மேலும் இந்தப் பணிகளை அஞ்சல் துறை பணியாளர்களை ஈடுபடுத்தி செய்வதை எதிர்க்கிறோம் என்றும் பதிவு செய்தோம். உங்களின் கருத்துக்கள் துறையின் செயலரிடம் தெரிவிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.இந்த சந்திப்பின் மூலம் நமது தெளிவான முதன் நிலை எதிர்ப்பை இலாக்காவுக்கு பதிவு செய்துள்ளோம் என்பது முக்கியமானதாகும்.

இதன் பின்னர் திரு. Shailendra Dashora, DDG (SR, Legal & VP) அவர்களை சந்தித்து இரண்டு கடிதங்களை அளித்துப் பேசினோம் .
முதலாவது, உறுப்பினர் சரிபார்ப்பில் கலந்துகொண்டுள்ள AIPEU GDS சங்கத்திற்கு உறுப்பினர்களிடம் இருந்து சந்தா பிடித்து அளிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது. இதற்கு உரிய ஏற்கனவே RSA விதிகளின் படியான உத்திரவு நகல்களை அளித்துப் பேசினோம்.உங்கள் வாதம் சரியானது என்றும் இதன் மீது துறை செயலருக்கு உரிய கோப்பு குறிப்பு அனுப்பப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இரண்டாவது, எந்தவித உறுப்பினர் சரிபார்ப்பிலும் ஈடுபடாத, உரிய ஊழியர் சதவீத எண்ணிக்கையை பெறாத சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது தவறு என்பதை சுட்டிக் காட்டி பேசினோம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்திட அவர் உறுதி அளித்தார்.

பேசிய விபரங்களையும் உள்ளடக்கி பல்வேறு அகில இந்தியப் பிரச்சினைகளின் மீது மொத்தம் 29 கடிதங்கள் ஒரே நாளில் அளிக்கப்பட்டன என்பது நமது தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் இடைவிடாத முயற்சியின் வெளிப்பாடாகும். இவையெல்லாம் நமது தலைவர் KVS அவர்களின் முழுமையான உதவியுடன்
நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் கடிதங்களைத் தயார் செய்து எடுத்துச் சென்று நமது சம்மேளன மாபொதுச் செயலரை அழைத்துச் சென்று பேசிட எடுத்த முயற்சிகளாகும். நமது தலைவர் KVS அவர்களுக்கு நமது பேரவை சார்பாக நம்முடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த சந்திப்புகளுக்கு தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளை உடன் அழைத்துச் சென்று விவாதித்து கடிதங்களை அளித்துப் பேசி ஒரு நல்ல முன்னேற்றத்திற்கு உதவிய நமது சம்மேளன மா பொதுச் செயலர் தோழர். R.N. பரசர் அவர்களுக்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம்.

கீழே DG அவர்களது CHAMBER எதிரே அவரை பார்க்கச் செல்லுமுன் நமது சம்மேளன மாபொதுச் செயலருடன் சேர்ந்து நமது மாநிலச் சங்க நிர்வாகிகள் அமர்ந்து இருக்கும் காட்சியின் புகைப்படம். அருகே கர்நாடக அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் மற்றும் மாநிலச் செயலர்.

தோழமையுடன் மாநிலச்
சங்கத்தின் செய்திப் பகிர்வு,

= NCA- பாலு
எழுச்சிப் பேரவை,
தமிழ் மாநிலம்.

J. Ramamurthy

Posts : 9
Join date : 02/09/2018

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum